Also Watch
Read this
By: Manigandan Raja

தாயகம் அழைத்து வரப்பட்ட 340 மீனவர்கள் :
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் ஈரான் நாட்டில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்த நிலையில் அங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போர் காரணமாக தொழில் செய்ய முடியாமலும் போதிய உணவு கிடைக்காமலும் தங்குவதற்கு இயலாத நிலையிலும் அவதிப்பட்டு வந்தனர் இதனால் தங்களை தாயகத்திற்கு மீட்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
அவர்களது குடும்பத்தினரும் மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தினர் இது குறித்து கன்னியாகுமரி தொகுதி எம்எல்ஏ தளவாய் சுந்தரம் முயற்சியில் அதிமுக எம்பி தம்பிதுரை நாடாளுமன்ற கூட்டத்தில் ஈரானில் பரிதவிக்கும் மீனவர்களை மீட்டு வர மத்திய அரசின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியதோடு பிரதமர் அமைச்சர் உள்ளிட்டோரை சந்தித்து மனு அளித்தனர்.
இந்நிலையில் மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கையை ஒட்டி முதல் கட்டமாக 340 மீனவர்கள் பலர் தாயகம் அழைத்து வரப்பட்டனர் அவர்களுக்கு குமரி மாவட்ட எல்லையான குமாரபுரம் பகுதியில் தளவாய் சுந்தரம் எம் எல் ஏ தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
தாயகம் திரும்பிய மீனவர்கள் கூறுகையில் போர் சூழலால் நிம்மதி இழந்து பரிதவித்த போது தங்களுக்காக தமிழகத்தில் இருந்து மக்கள் பிரதிநிதிகளும் அதிகாரிகளும் மத்திய மாநில அரசுகளும் மேற்கொண்ட நடவடிக்கையால் பாதுகாப்பாக தங்கள் தாயகம் திரும்பி வந்த நிலையில் தங்களுக்காக முயற்சித்த அனைவருக்கும் நன்றி என கூறினர்.
மேலும் ஈரான் நாட்டில் பரிதவிக்கும் மீதமுள்ள மீனவர்களை இரண்டு கட்டங்களாக ஓரிரு நாட்களுக்குள் தாயகம் அழைத்து வருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved