Also Watch
Read this
By: Manigandan Raja

நேருக்கு நேர் மோதிய விபத்து :
தேனி மாவட்டம் அனுமந்தன்பட்டி அருகே கம்பம் திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் லாரியும் காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் கம்பம் வடக்கு பற்றிய சேர்ந்த சுஜித் , தீபக் குமார் என்ற இரண்டு இளைஞர்கள் சம்பவ இடத்தில் வலி
தேனி மாவட்டம் கம்பம் வடக்குப்பட்டி சேர்ந்தவர் சுஜித், தீபக் இவர்கள் தங்களுடைய காரில் தனது நண்பரை வீட்டில் இறக்கிவிட்டு உத்தம்பாளையம் அருகே உள்ள மெரினா அருகில் டீ குடித்து விட்டு வீடு திரும்பி கொண்டு இருக்கையில் கேரளாவில் இருந்து வந்த லாரி காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் சம்பவ இடத்தில் இருவரும் உயிரிழந்து உள்ளனர்.
இதுகுறித்து உத்தமபாளையம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விரைந்து வந்த காவல்துறையினர் இறந்தவரின் உடல்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு உத்தமபாளையம் அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர்.
தொடர்ந்து அதிகாலை வேலை என்பதால் இறந்தவர் யார் என்பதில் சந்தேகம் எழுந்து வந்த நிலையில் இறந்தவர்கள் கம்பம் வடக்கு பற்றிய சேர்ந்த சுஜித் தீபக்குமார் என்பது தெரிய வந்துள்ளது இவர்களது உடலை பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரி கொண்டு சென்றனர்.
தேசிய நெடுஞ்சாலையில் நடந்த விபத்தில் இருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி வரும் சூழலில் இறந்தவர்களின் உடல்கள் தேனி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது
இதுகுறித்து உத்தமபாளையம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved