Also Watch
Read this
By: Web Team

நெல்லை மாவட்டம் ராமையன்பட்டியில் அரசு பேருந்து மோதி வங்கி ஊழியர் உயிரிழந்த நிலையில், அவரது உடலை எடுக்கவிடாமல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சிவாஜி நகரை சேர்ந்த வங்கி ஊழியர் செல்வராஜ் என்பவர் சாலையை கடக்க முயன்றுள்ளார்.
அப்போது, அந்த வழியாக சென்ற அரசு பேருந்து ஒன்று எதிர்பாராத விதமாக அவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனையடுத்து, பேருந்து ஓட்டுநர் தப்பி சென்றதால், ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் செல்வராஜின் சடலத்தை எடுக்க விடாமல் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, அந்த வழியாக வந்த அரசு பேருந்தின் மீது போராட்டகாரர்கள் கல்வீசி தாக்கியதில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்தது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved