புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் மாநில அளவிலான ஆண்கள் மற்றும் பெண்கள் கபடி போட்டிகள் நடைபெற்றன. முன்னாள் கபடி வீரர்கள் குழு சார்பில் நடைபெற்ற போட்டியில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த அணிகள் கலந்து கொண்டன. ஆடவர் பிரிவில் 16 அணிகள், மகளிர் பிரிவில் 16 அணிகள் என மொத்தம் 32 அணிகள் பங்கேற்ற போட்டியில், வீரர், வீராங்கனைகள் சிறப்பாக விளையாடி தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். வெற்றி பெற்ற அணிகளுக்கு நினைவு கோப்பைகள் வழங்கப்பட்டன.