news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews "நாட்டிலேயே தமிழகத்தில் தான் அதிக சம்பவங்கள்"
tv

Also Watch

tv

Read this

"நாட்டிலேயே தமிழகத்தில் தான் அதிக சம்பவங்கள்"

கிட்னி கொள்ளை - அன்புமணி ஆவேசம்

33

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

இந்தியாவிலேயே, அதிக கொலை நிகழ்ந்த மாநிலம் தமிழ்நாடு தான் என்று, குற்றம் சாட்டியுள்ள பாமக தலைவர் அன்புமணி, இயற்கை வளத்துடன் கிட்னியையும் கொள்ளை அடிக்கும் திமுக ஆட்சியை மக்கள் மன்னிக்கக் கூடாது என்றும் ஆவேசமாக பேசி உள்ளார்.

திருச்சியில் என்டிஏ பொதுக்கூட்டம்
திருச்சியில் நடைபெற்ற என்டிஏ பொதுகூட்டத்தில், பாமக தலைவர் அன்புமணி பேசியதாவது;
தமிழ்நாட்டில், மீண்டும் ஏன் திமுக ஆட்சிக்கு வரக்கூடாது? தமிழக மக்கள் ஏன் திமுகவுக்கு மீண்டும் வாக்கு அளிக்க கூடாது? என்று பல காரணங்கள் உள்ளன. இதில், மிக முக்கிய காரணம், தமிழ்நாட்டில் கடந்த ஐந்து ஆண்டு காலத்தில் 8,752 கொலை நடந்து உள்ளது. இந்தியாவிலேயே அதிக கொலை நடந்த மாநிலம் தமிழ்நாடு. எண்ணிக்கையில் சொல்லவில்லை, மக்கள் தொகை அடிப்படையில் சொல்கிறேன். இதில் 1,977 பெண்களை கொலை செய்து உள்ளனர். 361 குழந்தைகளை கொலை செய்து உள்ளனர். இதில் 38 பெண் குழந்தைகளை கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்து உள்ளனர்.

எப்படிப்பட்ட தமிழகம் இன்று, இந்த நிலையில் இருக்கிறது என்று தமிழக மக்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். இதற்கு எல்லாம் காரணம், திமுக அரசு, தமிழ்நாட்டில் மதுவை விற்கவில்லை, மதுவை திணித்துக் கொண்டு இருக்கின்றனர். இந்தியாவிலேயே அதிக மது விற்கும் மாநிலம் தமிழ்நாடு. இந்தியாவிலேயே மதுவால் அதிக சாலை விபத்து நடக்கின்ற மாநிலம் தமிழ்நாடு, இந்தியாவிலேயே அதிக மக்களுக்கு மதுவால் கல்லீரல் பிரச்சனை இருக்கும் மாநிலம் தமிழ்நாடு.

பெண்களுக்கு எதிரான குற்ற குற்றங்கள்
கடந்த 5 ஆண்டு காலத்தில், இந்தியாவிலேயே பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 44,000. இதில் 2,200 குற்றங்கள் பாலியல் வன்கொடுமை குற்றங்கள். மதுராந்தகத்தில் 15 வயது சிறுமியை 2 மனித மிருகம் பாலியல் வன்கொடுமை செய்து, தப்பித்து விட்டனர். 4 வாரத்திற்கு முன்பு கிருஷ்ணகிரி மாவட்டத்தில், இரண்டரை வயது குழந்தையை ஒரு மிருகம், பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்திருக்கிறான். அவன், திமுகவின் இளைஞர் சங்க பொறுப்பாளர் என்று சொல்கின்றனர். 4 மாதத்திற்கு முன்பு கும்மிடிப்பூண்டி பகுதியில் ஆரப்பாக்கம் என்ற கிராமத்தில் 8 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரன்.

யார் அந்த சார்?
அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் யார் அந்த சார்? இன்னும் கண்டுபிடிக்கவில்லை. கோவை விமான நிலையத்தில் ஒரு பெண்ணை 3 கொடூரன், பாலியல் வன்கொடுமை செய்கின்ற மாநிலம் தமிழ்நாடு. இதெல்லாம் வெட்கக்கேடு. ரோம் எரிகின்ற நேரத்தில் அதனுடைய மன்னர் நீரோ பிடில் வாசித்தார் என்று சொல்வார்கள். இவ்வளவு கொடுமைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பாலியல் வன்கொடுமை நடக்கும் நேரத்தில், அதைத் தான் இன்று முதல்வர் செய்து கொண்டிருக்கிறார். இவ்வளவு பிரச்சினைகளுக்கு மத்தியில் அன்றாடம் ஒவ்வொரு விளம்பர சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறார். தயவு செய்து இந்த கொடூர திமுக ஆட்சியை அகற்றுங்கள். இவர்கள் ஆண்டது போதும், நாசப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

இந்த தலைமுறை இருக்காது
ஒரு பக்கம் மது, மறுபக்கம் போதை பொருட்கள். கடந்த ஐந்தாண்டு காலத்தில் மட்டும் தமிழ்நாட்டில் 22 லட்சம் கிலோ கஞ்சா வணிகம் செய்யப்பட்டு உள்ளது. கஞ்சாவை போன்ற இன்னும் கொடூரமான மோசமான மேற்கத்திய நாட்டில் விற்கின்ற அத்தனை போதை பொருட்களும், தமிழ்நாட்டில், நகரங்கள் மட்டுமல்ல கிராமத்தில் விற்று கொண்டு இருக்கின்றனர். இவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், தமிழ்நாடு முடிந்துவிடும், இந்த தலைமுறை இருக்காது. தமிழக மக்களே, ஒரு ஆட்சி மாற்றத்தை கொண்டு வாருங்கள். ஒரு பக்கம் கொலைகள், மற்றொரு பக்கம் தற்கொலைகள். தமிழ்நாட்டில் ஐந்து ஆண்டு காலத்தில் 3,280 விவசாயிகள் தற்கொலை செய்து உள்ளனர். மன்னிக்க கூடாது, விவசாயிகள் மன்னிக்க மாட்டார்கள்.

எங்கள் கூட்டணிக்கு வெற்றியை கொடுங்கள்
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து விவசாய பெருமக்களே, உங்கள் பாதங்களை தொட்டு கேட்கின்றேன், நீங்கள் திமுகவை அகற்றுங்கள், விரட்டி அடியுங்கள். நாங்கள் உங்களுக்கு நல்லது செய்வோம். மத்தியில் நம் ஆட்சி, மாநிலத்தில் நம் ஆட்சி. நம் கூட்டணிக்கு வாக்களியுங்கள். மண்ணை கொள்ளை அடித்தனர், மலையை கொள்ளை அடித்தனர், மரத்தை கொள்ளை அடித்தனர், திருச்சியில் கிட்னியையும் கொள்ளை அடித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த திமுகவை நீங்கள் மன்னிக்க கூடாது. இந்த கொடூரமான, மக்களுக்கு எதிரான, பெண்களுக்கு எதிரான, குழந்தைகளுக்கு எதிரான, இந்த மோசமான ஆட்சியை அகற்றுங்கள் அகற்றுங்கள் அகற்றுங்கள். எங்கள் கூட்டணிக்கு வெற்றியை கொடுங்கள்.
இவ்வாறு அன்புமணி உரையாற்றினார்.


Related Link
இனி மக்கள் நம்ப மாட்டார்கள் - இபிஎஸ் உறுதி

இனி மக்கள் நம்ப மாட்டார்கள் - இபிஎஸ் உறுதி

              


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கோடை வெயிலுக்கு இதுவரை 109 பேர் பலி

0
16 mins agoshare
Summer








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved