Also Watch
Read this
Posted on: Feb 14, 2026 11:57 AM
By: Manigandan Raja

மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்த பேராயர் :
சிஎஸ்ஐ திருச்சபையின் சேலம் ஈரோடு மண்டல பேராயராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பதவியேற்று பொறுப்பு வகித்து வந்தவர் ஜேக்கப் லிவிங்ஸ்டன். இவர் இன்று காலை
வழக்கம் போல் நடை பயிற்சிக்காக சென்றிருந்தார்.
அப்பொழுது அரசு மருத்துவமனை அருகே உள்ள மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்துள்ளார். அவர் உடனடியாக மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவர் கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது தவறி விழுந்து உயிரிழந்தாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved