Also Watch
Read this
By: Web Team

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மாணவ-மாணவிகளை ஏற்றிச் சென்ற கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பொட்டுலுப்பட்டியை சேர்ந்த காசிப்பாண்டி, தனது காரில் ஆறு மாணவ, மாணவிகளை எற்றிக்கொண்டு வீடு திரும்பியுள்ளார்.
போலிபட்டி ரயில்வே பாலம் அருகே சென்று கொண்டிருந்த போது கார் திடீரென தீப்பிடித்துள்ளது. இதனை அறிந்த காசிப்பாண்டி மற்றும் மாணவ, மாணவிகள், காரை விட்டு வெளியேறி உயிர் தப்பிய நிலையில், கார் முழுவதும் தீப்பற்றி கொழுந்து விட்டு எரிந்தது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved