Also Watch
Read this
By: Manigandan Raja

மதுபோதையில் காரை இயக்கி விபத்து :
பாப்பாரட்டிப்பட்டி அருகே இன்று காலை கர்நாடகா பதிவு எண் கொண்ட வாகனத்தில் ஒருவர் பாப்பாரப்பட்டி - பாலக்கோடு சாலையில் குடிபோதையில் தாறுமாறாக காரை ஓட்டிச் சென்ற ஆசாமி விபத்து ஏற்படுத்திய காருக்கு பின்னால் வந்த மற்றொரு வாகன ஓட்டி விபத்து ஏற்படுவதாக என்பதால் வாகனத்தில் செல்போன் மூலம் வேகமாகச் சென்ற காரை வீடியோ பதிவு செய்து கொண்டே விபத்து ஏற்படுத்திவிடுவார் என்று பின்னால்
வந்த கார் ஓட்டி காவல்துறை உதவி எண்ணில் (100) தகவல் அளித்தார்.
தகவல் தெரிவித்துக் தெரிவித்துக் கொண்டு இருந்த பொழுது மது பாதியில் தாறுமாறாக ஓட்டிச் சென்ற கார் எதிரே வந்த அரசு நகர பேருந்து மீது நேருக்கு நேராக மோதி விபத்து ஏற்பட்டது. இதனைக் கண்ட அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மது போதையில் காரை ஓட்டி வந்த நபரைப் பிடித்து பாப்பாரப்பட்டி காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
மது போதையில் தாறுமாறாக காரை ஓட்டி வந்து அரசு நகர பேருந்து மீது மோதிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் தகவல் அறிந்து வந்த பாப்பாரப்பட்டி காவல்துறையினர் போதை ஆசாமிய கைது
செய்து வழக்கு பதிவு செய்தனர் .
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved