news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews காதல் மனைவி கழுத்தறுத்து கொ* ஓடும் ஆட்டோவில் நடந்த பயங்கரம்
tv

Also Watch

காதல் மனைவி கழுத்தறுத்து கொ* ஓடும் ஆட்டோவில் நடந்த பயங்கரம்

கதறிய அழுதபடியே வாக்குமூலம்

2

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சென்னை, அம்பத்தூர் அருகே காதல் மனைவியை ஓடும் ஆட்டோவிலேயே கணவன் கழுத்தை அறுத்து கொ* செய்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது. ஆட்டோ ஓட்டுநரான கணவன் காதல் மனைவியை கொ* செய்தது ஏன்?

இளைஞருடன் தகாத உறவு
சென்னை, அம்பத்தூர் அருகே உள்ள மேனாம்பேடு இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர்கள் வைதேகி-சின்னா தம்பதி. காதலித்து திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதிக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். சின்னா ஆட்டோ ஓட்டி வந்த நிலையில், மனைவி வைதேகிக்கு பட்டாபிராமில் உள்ள ஒரு இளைஞருடன் தகாத உறவு ஏற்பட்டதாக தெரிகிறது. வைதேகியின் தாய் வீடு பட்டாபிராமில்தான் உள்ளது என்பதால் அடிக்கடி அங்கு நேரில் சென்றும் தனது கள்ளக்காதலை வளர்த்ததாக கூறப்படுகிறது.

மது போதையில் மாமியார் வீட்டுக்கு...
அதேபோல், தனது வீட்டுக்கு வந்து இன்ஸ்டாவிலும் காதல் சேட்டிங்கை தொடர்ந்ததாக தெரிகிறது. இதனை கண்டறிந்த கணவன், பலமுறை மனைவியை எச்சரித்துள்ளார். இதுதொடர்பாக கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட சண்டையில் தனது தாய் வீட்டுக்கு கோபித்துக்கொண்டு சென்றார் வைதேகி. மனைவி தன்னுடன் வாழ வராவிட்டால் கைகளை கத்தியால் அறுத்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில் புதிய கத்தி ஒன்றை வாங்கிக் கொண்டு சின்னா, மதுபோதையில் தனது மாமியார் வீட்டுக்கு சென்றதாக கூறப்படுகிறது.

ஆட்டோவில் கொடூரம்
கெஞ்சி கூத்தாடி தன்னுடன் வாழ வருமாறு மனைவியை அழைத்த சின்னா பிரச்சினையிலும் ஈடுபட்டுள்ளார். அதனால், கணவனுடன் ஆட்டோவில் ஏறிய வைதேகி வாகனத்தை தானே இயக்கி உள்ளார். பின்னால் அமர்ந்திருந்த சின்னா உன் தாய் வீட்டுக்கு இனி செல்லவே கூடாது எனக்கூறியதால் தம்பதிக்குள் வாக்குவாதம் முற்றி உள்ளது. அப்போது, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மனைவியின் கழுத்தை அறுத்துள்ளார். மேலும், கழுத்து, மார்பு, வயிறு என உடம்பின் பல்வேறு இடங்களில் குத்தி உள்ளார் சின்னா. ஆட்டோவில் இருந்து இறங்கி ஓடியும் விடாமல் துரத்தி சென்று கணவன் குத்த, அதில் நிலைகுலைந்து கீழே விழுந்த வைதேகி அதிக ரத்தம் வெளியேறி உயிரிழந்தார்.

போதை தெளிந்த பிறகு...
இரவு 9.30 மணியளவில் கொ* நடந்த நிலையில் சிசிடிவி காட்சி பதிவுகளை வைத்து விசாரணையில் இறங்கினர் போலீசார். அதில், ஆட்டோ எண்ணை வைத்து அடுத்த ஒருமணி நேரத்திலேயே சின்னாவை கைது செய்தனர். போதையில் இருந்த அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் விசாரித்தபோது சின்னா உளறி உள்ளார். சிறிதுநேரத்திற்கு பிறகு கத்திக் கதறிய அவர், மதுபோதையில் கொ* செய்துவிட்டதாகவும், தனது மனைவியை ஆழமாக காதலித்ததாகவும், தனது பிள்ளைகள் தவித்துவிடுமே எனவும் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

Related Link
ஆயுதத்தால் ஆக்ரோஷம், அதிர்ச்சி வீடியோ

ஆயுதத்தால் ஆக்ரோஷம், அதிர்ச்சி வீடியோ

              

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

24 லட்சம் பெண் குழந்தைகளுக்கு உயர் கல்வி மறுப்பு

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved