news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews பள்ளிக்கு சொந்தமான நிலம் தனியாருக்கு சொந்தம் என பட்டா
tv

Also Watch

tv

Read this

பள்ளிக்கு சொந்தமான நிலம் தனியாருக்கு சொந்தம் என பட்டா

திருவுடையார்பட்டி, சிவகங்கை

10

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
சிவகங்கை பள்ளி பிரச்சனை

தனியாருக்கு சொந்தம் என பட்டா  : 

திருப்புத்தூர் வட்டம் திருவுடையார்பட்டி கிராமத்தில் பழைய பள்ளிக்கூடத்திற்கு சொந்தமான இடத்தில் தனியாருக்கு புல தணிக்கை செய்யாமலேயே வீட்டுமனை ஒப்படைப்பு செய்த வருவாய்த் துறையினரை கண்டித்து தேர்தல் புறக்கணிப்பு செய்கிறோம் என திருப்புத்தூர் மற்றும் கிராம பகுதிகளில் சுவரொட்டிகளை திருவுடையார்பட்டி கிராம பொதுமக்கள் ஒட்டினர்.

2026 ஆம் ஆண்டுக்கான சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் இந்த சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுசம்மந்தமாக வழக்கு நடைபெற்று வரும் நிலையில் இப்பகுதியில் நடைபெற்று வரும் கிராம கோயில் பணியினை ஒரு தரப்பினர் நிறுத்தக்கோரி மாவட்ட ஆட்சியருக்கு புகார்மனு அனுப்பியதாக கிராம மந்தையில் கூடிய கிராமத்தினர்.

திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு தனியாருக்கு ஒப்படைப்பு செய்யப்பட்ட கிராம இடத்தை மீட்டுத் தருமாறு கோஷமிட்டனர். நடவடிக்கை இல்லை எனும்பட்சத்தில் வரும் சட்டசபை
தேர்தலை ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கப் போவதாகக் கூறினர். அதனையடுத்து அங்கு வந்த காவல் துறையினர் வருவாய்துறையினரிடம் பேசி முடிவெடுக்கப்படும் எனக் கூறியதையடுத்து கலைந்து சென்றனர்.

Related Link
வாக்காளர்களுக்கு பணம் வழங்குவது தொடர்பாக மோதல்

வாக்காளர்களுக்கு பணம் வழங்குவது தொடர்பாக மோதல்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

முதல்வர் ஆதரிப்பது ஏற்புடையதல்ல - இபிஎஸ் பேச்சு

4
13 mins agoshare
முதல்வர் ஆதரிப்பது ஏற்புடையதல்ல - இபிஎஸ் பேச்சுbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved