Also Watch
Read this
By: Manigandan Raja

8 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா வெற்றி :
தென்னாப்பிரிக்கா மகளிர் அணிக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது..! டர்பனில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனால் முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 147 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 17.1 ஓவர்களில் 148 ரன்கள் அடித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்கா அணி முன்னிலையில் உள்ளது.
PSL போட்டிகளை விட ஐபிஎல் போட்டிகளே சிறந்தவை :

பாகிஸ்தானில் நடைபெறும் PSL போட்டிகளை விட ஐபிஎல் போட்டிகளே சிறந்தவை என டெல்லி கேப்பிடல்ஸ் வீரர் சாம் பில்லிங்க்ஸ் கருத்து தெரிவித்தார். PSL மற்றும் IPL என இரண்டிலுமே விளையாடிய அனுபவம் தனக்கு உள்ளதாகவும், பாகிஸ்தான் வீரர்களை விட இந்திய வீரர்கள் துடிப்பாக செயல்படுகின்றனர் எனவும் அவர் கூறினார்.
இந்த ஆண்டை போலவே அடுத்து ஆண்டு நடைபெறும் ஐபில் தொடரிலும் பங்கேற்க விரும்புவதாக சாம் பில்லிங்க்ஸ் கூறினார்.
அனுமன் கோயிலில் கம்பீர்,சூர்யகுமார் யாதவ் வழிபாடு :

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் டி-20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் குஜராத் மாநிலம் சலங்பூரில் ((Salangpur ))உள்ள புகழ்பெற்ற அனுமன் கோயிலில் டி-20 உலகக் கோப்பையை வைத்து பூஜை செய்து சிறப்பு வழிபாடு செய்தனர். தொடர்ந்து கோயில் வேதாச்சாரியார்கள் மந்திரம் ஓதி அனுமனை வழிபட்டனர்.
சிஎஸ்கே ஒரு அணியாக இன்னும் முன்னேறவில்லை :

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு அணியாக இன்னும் முன்னேற்றமடையவில்லை என்றும் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்துக் கொண்டே இருப்பதாகவும் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் வேதனை தெரிவித்தார்.
இனி வரும் போட்டிகளில் சென்னை அணியில் வீரர்கள் முற்றிலும் செயல் திறன் அடிப்படையிலே தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்றார். தகுதியான வீரர்களை தேர்ந்தெடுக்கவில்லை என்றால் கோப்பை கனவு தகர்ந்துவிடும் எனவும் பிளமிங் கருத்து தெரிவித்தார்.