திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் வயிற்றிலிருந்த குழந்தை மாற்றுத்திறனாளி என்பதை மறைத்த விவகாரத்தில் ஆய்வுக்கு சென்ற அதிகாரிகள், விதிமுறை மீறி செயல்பட்டதாக அங்கிருந்த மருந்தகத்திற்கும் சீல் வைத்தனர். மல்லிகுப்பம் பகுதியை சேர்ந்த கர்ப்பிணி புவனேஸ்வரி என்பவர் கும்மிடிப்பூண்டியில் உள்ள சுமதி கிளினிக்கில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு குழந்தை மாற்றுத்திறனாளியாக பிறந்த நிலையில், ஸ்கேன் செய்து குழந்தையின் பிரச்சனையை கூறாமல் பணம் பறிக்கும் நோக்குடன் அக்கிளினிக் செயல்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது. இது குறித்து விசாரிக்க அக்கிளினிக்கிற்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் சென்ற நிலையில், அக்கிளினிக் அருகாமையில் செயல்பட்ட விஜயா மருந்தகம், உரிய ஆவணமின்றி செயல்பட்டது தெரிய வந்ததையடுத்து சீல் வைத்தனர்.