திருவள்ளூர் மாவட்டம் சீத்தஞ்சேரியில் மர்ம நபர்கள் வைத்த தீயில் ஏரியில் இருந்த செடிகள் மளமளவென பற்றி எரிந்து சாலைகளில் கரும்புகை சூழ்ந்ததால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். கடும் வெயில் வாட்டி வதைத்து வரும் சூழலில் சீத்தஞ்சேரி பகுதி ஏரியில் காய்ந்திருந்த செடிகளில் மர்ம நபர்கள் தீவைத்துள்ளனர். இந்த தீ சாலையோரம் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு பயங்கரமாக பற்றி எரிந்ததால், எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு கரும்புகை சாலையில் சூழ்ந்தது. இதையடுத்து, வனத்துறையினரும், தீயணைப்புத் துறையினரும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.