ஆபரண தங்கத்தின் விலை, நேற்று சரிந்த நிலையில், இன்று மீண்டும் உயர்ந்து ஒரு லட்சம் ரூபாயை நெருங்கியது. 22 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு 50 ரூபாய் உயர்ந்து 12 ஆயிரத்து 400 ரூபாய்க்கும், சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்து 99 ஆயிரத்து 200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், வெள்ளியின் விலை வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 11 ரூபாய் உயர்ந்து 222 ரூபாய்க்கும், ஒரு கிலோவுக்கு 11 ஆயிரம் ரூபாய் உயர்ந்து 2 லட்சத்து 22 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.