news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews காப்புக்காட்டில் இறந்து கிடந்த யானையின் தந்தங்கள் திருட்டு
tv

Also Watch

tv

Read this

காப்புக்காட்டில் இறந்து கிடந்த யானையின் தந்தங்கள் திருட்டு

வேலூர்

30

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Vellore

தந்தங்கள் திருட்டு :

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பேரணாம்பட்டு வனக்கோட்டத்திற்குட்பட்ட சாத்கர் மலை மற்றும் சிந்தக்கணவாய் ஆகிய காப்புக்காடுகளில் மர்மமான முறையில் ஐந்து யானைகள் உயிரிழந்து எலும்பு கூடாக இருந்ததை கண்டு வனத்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் இறந்த ஒரு குட்டி மற்றும் ஒரு பெண் யானை உள்பட நான்கு யானைகளை உடல் கூறு ஆய்வு செய்யப்பட்டது. உடல் கூறு ஆய்வின்போது யானைகள் வைரஸ் தாக்கி உயிர் இழந்ததாக சான்று அளிக்கப்பட்டது.

மேலும் உயிரிழந்த யானைகளின் இருந்து தந்தம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. மேலும் குடியாத்தம் மற்றும் பேர்ணாம்பட்டு வனத்துறையினர் தீவிர விசாரணையில்
ஆந்திர மாநிலம் பலமனேரி சேத்தப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த நபர்கள் இறந்த யானைகளின் தந்தம் வைத்து இருப்பதாக பேரணாம்பட்டு வனத்துறைக்கு தகவல் கிடைத்தது

அதன் பேரில் ஆந்திர மாநிலம் பலமனேரி வனத்துறை உதவியுடன் குடியாத்தம் வனத்துறையினர் ஆந்திர மாநிலம் சேத்தப்பேட்டை கிராமத்திற்கு சென்று யானையின் தந்தத்தை விற்க முயன்ற எல்லப்பா சந்திரபாபு உள்ளிட்ட இருவரை கைது செய்து அவர்களிடம் இருந்த யானை 2 தந்தங்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் யானை தந்தம் விற்பனையில் ஈடுபட்டு தப்பியோடிய சிவராஜ் முனியப்பா உள்ளிட்ட இருவரை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் சம்பவம் குறித்து குடியாத்தம் வனதுறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Link
பேருந்து எலக்ட்ரிக்கல் வேலையின் போது மின்கசிவு

பேருந்து எலக்ட்ரிக்கல் வேலையின் போது மின்கசிவு


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அஜித்தின் தாயார் மறைவுக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி!

1
8 hrs 26 mins agoshare
CM Vijay ajith housebutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved