news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கிராம சபை கூட்டத்தில் பரபரப்பு
tv

Also Watch

கிராம சபை கூட்டத்தில் பரபரப்பு

மேட்டூர்

3

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
slm 05

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே சின்ன சோரகை ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காத அதிகாரிகளை கண்டித்து கிராம மக்கள் முற்றுகையிட்டு வாங்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேட்டூர் அருகே நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளது சின்னசோரகை ஊராட்சி. இந்த ஊராட்சியில் உள்ள ஒன்பது வார்டுகளில் சுமார் 4,000 கிராம மக்கள் வசித்து வருகின்றன. இவர்களுக்கு சாலை, குடிநீர், பேருந்து உள்ளிட்ட எந்த ஒரு அடிப்படை வசதிகளும் ஊராட்சி நிர்வாகம் செய்து கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சின்ன சோரகை ஊராட்சி சேவை மைய கட்டிடத்தில் கிராம சபை கூட்டம் கிளர்க் கோகுல் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் குடிநீர், சாலை, மருத்துவம், பேருந்து வசதி குறித்து அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினர்.

அப்போது கிராம சபை கூட்டத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் கல்யாணசுந்தரம் காலம் தாமதமாக வந்தார். அவரை முற்றுகையிட்ட கிராம மக்கள் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காதது குறித்து சரமாரியாக கேள்வி எழுப்பினர். பொதுமக்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் அதிகாரிகள் திணறினர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில். சின்ன சோறாவை ஊராட்சியில் சாலை பழுதடைந்து குண்டும் குழியுமாக காணப்படுவதால் மிதிவண்டியில் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.

மேலும் வனவாசி கூட்டுக்குள் திட்ட மூலம் 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது . இப்பகுதியில் உள்ள நடுநிலைப்பள்ளியில் உள்ள குடிநீர் தொட்டிக்கும் தண்ணீர் வழங்க முடியவில்லை. இதனால் பொதுமக்களும் மாணவர்களும் அமைதி அடைந்து வருகின்றனர். பேருந்து வசதிகள் இல்லாததால் கிராம மக்கள் நடந்து செல்லக்கூடிய அவலம் ஏற்பட்டதாக வேதனை தெரிவித்தனர்.

தங்களது பகுதியில் மருத்துவமனை இல்லாததால் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நங்கவள்ளி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று மருத்துவம் பார்க்கும் நிலைக்கு ஆளாகி வருகின்றோம் என குற்றச்சாட்டு தெரிவித்தனர் .இதனை கண்டித்து கிராம சபை கூட்டத்தை கிராம மக்கள் புறக்கணிப்பதாக தெரிவித்தனர். பின்ன அதிகாரிகள் சமரச பேச்சு வார்த்தைகள் ஈடுபட்டு அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பதாக தெரிவித்தனர் அதனை அடுத்து கிராம சபை கூட்டம் தொடர்ந்து நடைபெற்றது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இடைவிடாது ஸ்கேட்டிங் செய்து உலக சாதனை.!

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved