Also Watch
Read this
Posted on: Sep 14, 2024 10:47 AM
By: Srini Vasan

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே மருந்துக் கடையின் பூட்டை உடைத்து 76 ஆயிரம் ரூபாய் பணம், பால் பவுடர் உள்ளிட்டவற்றுடன் கண்காணிப்பு கேமரா ஹார்ட் டிஸ்க்கையும் கொள்ளையடித்து சென்றவனை போலீசார் தேடி வருகின்றனர்.
பெதப்பம்பட்டியைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்பவர், தாராபுரம் - பொள்ளாச்சி பிரதான சாலையில் புதுச்சத்திரம் பகுதியில் மருந்துக்கடை வைத்துள்ளார்.
பெண் ஊழியர் காலையில் கடையை திறக்க வந்த போது, பூட்டு உடைக்கப்பட்டு ஷட்டர் திறந்துகிடந்ததை பார்த்து உரிமையாளர் சுரேஷ்குமாருக்கு தகவலளித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved