Also Watch
Read this
By: Manigandan Raja

போக்குவரத்து பாதிப்பு :
தமிழக அரசு மாநிலம் முழுவதும் கல்வி நிலையங்கள் வழிபாட்டுத் தலங்கள் மருத்துவமனைகள் உள்ளிட்ட பகுதிகளில் அருகே செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபானை கடைகள் 717 கடைகள் மூட உத்தரவிட்டது.
அதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் கண்டறியப்பட்டு டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டு வருகிறது. அதன்படி ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதியில் பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வந்த இரண்டு கடைகளும் அதே போல் ரயில் நிலையம் காய்கறி மார்க்கெட் நடுவில் செயல்பட்டு வந்த மற்றொரு டாஸ்மாக் கடை என மூன்று கடைகள் மூடப்பட்டது.
அரக்கோணம் நகரத்தில் நான்கு டாஸ்மாக் மதுபான கடைகள் செயல்பட்டு வந்த நிலையில், அதில் மூன்று கடைகள் மூடிவிட்டதால் செயல்பட்டு வரும் ஒரு டாஸ்மாக் கடையில் மது
பிரியர்கள் கூட்டம் அலைமோதி காணப்படுகிறது.
இதனால் நகர பிரதான சாலையான காந்தி சாலை முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் கடுமையாக அவதிப்பட்டனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved