Also Watch
Read this
ஸ்ரீபெரும்புதூர் அருகே ராஜலட்சுமி தனியார் பொறியியல் கல்லூரியில் அடுத்தடுத்து 2 நாட்களில் ஒரு மாணவி தற்கொ* மற்றொரு மாணவர் தற்கொ* முயற்சி சம்பவத்திற்கு இடையே விடுதியில் இருந்து அவசர, அவசரமாக மாணவர்கள் வெளியேற்றப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது. மாணவர் தற்கொ* முயற்சி சம்பவத்தில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தனியார் இன்ஜி. கல்லூரி
காஞ்சிபுரம் மாவட்டம், தண்டலம் ராஜலட்சுமி தனியார் பொறியியல் கல்லூரியில், இரண்டாம் ஆண்டு படித்து வரும் மாணவர் ஒருவர் செமஸ்டர் தேர்வு எழுதி கொண்டிருந்த போது, ரெஸ்ட் ரூம் செல்வதாக கூறிவிட்டு, வெளியே சென்று 3ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொ*க்கு முயன்றார். இதில் மாணவனின் கை மற்றும் கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில், உடனடியாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மாணவி விபரீதம்
இதற்கு முந்தைய நாள், இதே கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த ஷெரின் என்ற மாணவி 5ஆவது மாடியில் இருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொண்டார். பெற்றோருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஷெரின் இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.
அடுத்தடுத்து இரண்டு நாட்களில் நடந்த சம்பவம் பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், விடுதியில் இருந்த மாணவர்களை உடனேடியாக வெளியேற்றி மறு அறிவிப்பு வரும் வரை கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

அவசரமாக வெளியேற்றம்?
இதனிடையே விடுதியில் இருந்த மாணவர்களை அவசர, அவசரமாக வெளியேற்றிய வீடியோவும் வெளியாகியுள்ளது. மாணவர்களை ஏன் அவசரமாக வெளியேற்றினார்கள்? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக பேராசிரியர்கள் உட்பட 10க்கும் மேற்பட்டோரை ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று மாவட்ட எஸ்.பி. அரவிந்த் விசாரணை மேற்கொண்டார். இது தொடர்பாக விசாரணை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

உண்மை என்ன?
கல்லூரி மாணவி ஷெரின் தற்கொ* செய்து கொண்ட செய்தி வெளியான நிலையில், தற்கொ*க்கு முயன்ற மாணவர் கல்லூரி நிர்வாகத்திற்கு எதிராக கருத்து பதிவிட்டதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த கல்லூரி நிர்வாகம் மாணவனை அழைத்து டிஸ்மிஸ் செய்து விடுவோம் என்று மிரட்டியதாகவும், இதனால் மனமுடைந்த மாணவன் தற்கொ*க்கு முயன்றதாக சொல்லப்படுகிறது.

இதுதொடர்பாக சக மாணவர்கள் வாட்ஸ் ஆப்பில் பேசிய ஸ்கிரீன் சார்ட் வெளியாகியுள்ளது. இது ஒருபுறம் இருக்க தற்கொ*க்கு முயன்ற மாணவரிடம் விசாரணை நடத்தினால் மட்டுமே உண்மை தன்மை என்ன? என்பது குறித்த முழு தகவல் வெளிவரும் என்று காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved