Also Watch
Read this
கோவையை உலுக்கிய கல்லூரி மாணவன் படுகொ* வழக்கில், தனது மகனுக்கு போதைப் பழக்கம் எதுவும் இல்லை, அவன் மீது வீண் பழி போடுகிறார்கள் எனத் தாய் கண்ணீருடன் கதற, மற்றொருபுறம் கல்லூரி நிர்வாகமோ சமையலர் தாக்குதல் மற்றும் ஒழுங்கு நடவடிக்கை குறித்து விளக்கத்தை அளித்துள்ளது.

புகார்களுக்கு பதிலடி
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகேயுள்ள வடக்கனந்தல் கிராமத்தை சேர்ந்த கென்னடி - சுமதி தம்பதியின் மகன் அமுதன். கோவையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். இந்த சூழலில்தான், அதே கல்லூரியை சேர்ந்த சக மாணவர்கள் சிலர் அமுதனை அடித்து கொடூரமாக கொ* செய்ததாக வெளியான செய்தி அதிர வைத்தது. இதனிடையே, அமுதனின் சொந்த கிராமத்தில் கண்ணீர் மல்க இறுதிச்சடங்கு நடைபெற்ற நிலையில், அவர் மீது பரப்பப்பட்ட புகார்களுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார் தாய் சுமதி.
ஏன் கைது செய்யவில்லை?

சமையலர் மீது தாக்கு
மாணவனின் தாய் குற்றச்சாட்டு எழுப்பிய நிலையில், கல்லூரி முதல்வர் ஜெயாவும், டீன் மகுடேஸ்வரனும் செய்தியாளர்களைச் சந்தித்து தங்களது தரப்பு விளக்கத்தை அளித்துள்ளனர். கடந்த ஜூலை 21ஆம் தேதி இரவு, அமுதன், அஜீஷ் ஆகிய இரு மாணவர்களும் கல்லூரி வளாகத்தில் நடந்து சென்று கொண்டிருந்த போது, விடுதி சமையலர் மனோஜ் என்பவர், ’ஏன் இந்த நேரத்தில் சுற்றித் திரிகிறீர்கள்?’ எனக் கேட்டதாகவும், இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் சமையலரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, சமையலர்கள் போராட்டத்தில் ஈடுபடவே, 22ஆம் தேதி ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணை நடத்தியுள்ளது.

பெற்றோருடன் அனுப்பி வைத்து...
மாணவர்கள் தவறை ஒப்புக் கொண்டதால், ஜூலை 24ஆம் தேதி பெற்றோரை வரவழைத்து அமுதனை அவர்களிடம் ஒப்படைத்து அனுப்பியதாக கூறுகிறது கல்லூரி நிர்வாகம். ஆனால், அமுதனை பெற்றோர் அழைத்துச் செல்லாதது 10ஆம் தேதி மாலை வரை தங்களுக்கு தெரியாது என்றும், போதைப்பொருள் விவகாரத்தில் அமுதனிடம் எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை என்றும் கூறி உள்ளனர்.

தங்களுக்கு தெரியாது...
மேலும், கல்லூரிக்குள் போதைப்பொருள் புழக்கம் எதுவும் இல்லை என்றும், மோதலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 15 மாணவர்களின் விவரங்களை மட்டுமே காவல்துறைக்கு அளித்திருப்பதாகவும் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

குற்றச்சாட்டு இன்னும் முழுமையாக நிரூபணமாகாததால் மாணவர்கள் மீது கல்லூரி தரப்பில் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், அவர்களை தொடர்பு கொள்ள இயலவில்லை என்றும், கல்லூரி தரப்பில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. விடுதியில் அமுதன் இருந்திருந்தால் இந்த அசம்பாவிதம் நடந்திருக்காதோ எனப் பெற்றோர் வேதனை தெரிவித்துள்ள நிலையில், வெளியில் அமுதன் தங்கியிருந்தது தங்களுக்கு தெரியாது என நிர்வாகம் கைவிரித்துவிட்டது.

மாணவர்கள் தலைமறைவு
ஒரு இளம் மாணவனின் உயிரைப் பறித்த இந்த சம்பவத்தின் பின்னணியில் உண்மையில் நடந்தது என்ன?

சமையலர் தகராறு தான் கொ*க்கு காரணமா? அல்லது ஏதேனும் மோதல் இருக்கிறதா? என கேள்விகள் எழுகின்றன. எனினும், தலைமறைவாக உள்ள மாணவர்களை கைது செய்து விசாரணை நடத்தினால் தான் அமுதனின் கொலையில் உள்ள உண்மையான பின்னணி வெளிச்சத்திற்கு வரும்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved