Also Watch
Read this
Posted on: May 26, 2025 01:25 AM
By: Srini Vasan

கோவை மாவட்டம் ஆனைமலை அடுத்த ஆழியார் பகுதியில் மழையின் போது அடித்த சூறாவளி காற்றில் சாய்ந்த மரம் சுற்றுலா பயணியின் கார் மீது விழுந்து விபத்துக்குள்ளானது.
பொள்ளாச்சியைச் சேர்ந்த ராமசாமி என்பவர் தனது குடும்பத்துடன் ஆழியார் பகுதியை சுற்று பார்த்துவிட்டு அங்கிருந்த உணவகத்தில் உணவு அருந்த சென்றுள்ளார்.
அப்போது அடித்த சூறாவளி காற்றில் மரம் ஒன்று வேராடு சாய்ந்து அவர்கள் கார் மீது விழுந்தது. மரத்தை மீட்பு குழுவினர் அப்புறப்படுத்தினர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved