துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திரைபடத்தில் நடிக்கும் போதே பட்டியிலின மக்கள் குறித்து பேசியுள்ளார் நீங்கள் அப்படி நடித்துள்ளீர்களா என தவெக தலைவர் விஜயை அமைச்சர் பொன்முடி மறைமுகமாக விமர்சித்துள்ளார். சென்னை திரு.வி.க நகரில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், அரசியலுக்கு வந்த உடனே நாங்கள்தான் ஆட்சி பிடிப்போம் என்று சொல்லும் நீங்கள், கால காலமாக ஆட்சி நடத்தும் எங்களை பார்த்து 200 தொகுதிகளில் எப்படி வெல்வீர்கள் என்று கேட்கலாமா என கேள்வி எழுப்பினார்