Also Watch
Read this
By: Web Team

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே நவீன சமுதாய கழிப்பிடத்தில் போர்வெல் பழுதாகி அதனை பயன்படுத்த முடியாதது குறித்து பலமுறை புகார் அளித்தும் நகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பேரணாம்பட்டு நகராட்சிக்கு உட்பட்ட 20வது வார்டில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் நகராட்சி நிர்வாகத்தின் மூலம் நவீன சமுதாயம் கழிப்பிடம் கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர்.
அதிலுள்ள போர்வெல் பழுது மற்றும் கதவுகள் சேதமானதால் பெண்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகுவது குறித்து,
நகராட்சி ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved