Also Watch
Read this
By: Web Team

சேலம் மாமாங்கம் மேம்பாலம் அருகே சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்ட லாரி மீது அடுத்தடுத்த வாகனங்கள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். ஓமலூர் நோக்கி சென்று கொண்டிருந்த லாரியில் டீசல் காலியானதால் சாலையில் நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அந்த லாரி மீது பொள்ளாச்சியில் இருந்து தருமபுரி நோக்கி சென்ற மற்றொரு லாரி அதிவேகமாக மோதியதில் அதன் ஓட்டுநர் கோபி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்துக்குள்ளான லாரி மீது பின்னால் வந்த டெம்போ டிராவலர் மோதி தீப்பிடித்து எரிந்த நிலையில், அதில் இருந்த 10 பேர் உடனடியாக வெளியேறி உயிர் தப்பினர். நள்ளிரவில் ஏற்பட்ட விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved