news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews காரில் வந்து ஆடுகள் திருட்டு, கிராம மக்கள் அதிர்ச்சி
tv

Also Watch

tv

Read this

காரில் வந்து ஆடுகள் திருட்டு, கிராம மக்கள் அதிர்ச்சி

திருப்பத்தூர்

30

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TPT Goat theft

ஜோலார்பேட்டை சுற்று வட்டார பகுதிகளில் அடுத்தடுத்து, காரில் வந்து 13 ஆடுகள் திருடு போனதால், பொது மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடி கலகன் வட்டப் பகுதியைச் சேர்ந்த கண்ணப்பன் மகன் ரமேஷ், விவசாயி. இவர் ஆடு, மாடுகளை வைத்து பிழைப்பு நடத்தி வருகிறார்.

இந்நிலையில், வழக்கம் போல ஆடு, மாடுகளை மேய்த்து விட்டு தனது  கொட்டகையில் கட்டி விட்டு இரவு தூங்க சென்றார். இந்நிலையில், இரவு 12 மணியளவில் காரில் வந்த மர்ம கும்பல், ஒன்பது ஆடுகளை திருடி சென்றுள்ளனர். ஆடு கத்தியதை அறிந்த ரமேஷ், வெளியே வந்து பார்ப்பதற்குள் கண்ணிமைக்கும் நேரத்தில் கார் அங்கிருந்து சென்றது.

இதுகுறித்து, ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
இதேபோல், சின்ன பொன்னேரி பகுதியைச் சேர்ந்த சுப்ரமணி என்பவருடைய கொட்டகையிலிருந்து நான்கு ஆடுகளை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.
இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழகத்தில் பிரதமர் மோடி - கோவையில் வாக்கு சேகரிப்பு

19
9 hrs 24 mins agoshare
பிரதமர் மோடி உரைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved