news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews மதிய உணவு சாப்பிட்ட 44 மாணாக்கர்களுக்கு வாந்தி, மயக்கம்
tv

Also Watch

tv

Read this

மதிய உணவு சாப்பிட்ட 44 மாணாக்கர்களுக்கு வாந்தி, மயக்கம்

கோவை

13

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Kovai

44 மாணாக்கர்களுக்கு வாந்தி, மயக்கம் :

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் 479 மாணவ மாணவியர் பயின்று வருகின்றனர்.இந்த நிலையில் இன்று மதியம்
வழக்கம் போல மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்ட நிலையில்.

நான்காம் வகுப்பு பயிலும் மாணவர்கள் உணவை அருந்திக் கொண்டு இருந்த போது உணவை உட்கொண்ட சுமார் 10க்கும் மேற்பட்ட மாணவ மாணவியருக்கு அடுத்தடுத்து வாந்தி மற்றும் மயக்கம்
ஏற்பட்டுள்ளது.இதையடுத்து மாநகராட்சி சுகாதார துறையினருக்கு தகவலளிக்கப்பட்டு.

108 ஆம்புலன்ஸ் வாகனம் வரவழைக்கப்பட்டது.அதை தொடர்ந்து மேலும் சில மாணவர்களுக்கு மயக்கம் ஏற்படவே அனைவரும் உடனடியாக கோவை அரசு மருத்துவ கல்லூதி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

அங்கு அவர்களுக்குத் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதனிடையே சம்பவம் குறித்து தகவல் அறிந்து பள்ளிக்கு விரைந்து வந்த பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் நிலை குறித்து அறிய உள்ளே செல்ல முயன்ற நிலையில் பள்ளி நிர்வாகம் அவர்களை அனுமதிக்க மறுத்ததால் ஆத்திரம் அடைந்த பெற்றோர்கள் ஆசிரியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அங்கு சென்ற போலீசார் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமாதானப்படுத்தினர்.இதனிடையே கோவை அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்ற மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன்,மாணவ மாணவியரை நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்தார்.

பின்னர் சுதியாளர்களை சந்தித்த அவர், 31 ஆண் குழந்தைகள், 13 பெண் குழுந்தைகள் பாதிப்படைந்து உள்ளதாகவும் இரவு 9 மணி வரைக்கும் மாணவர்கள் மருத்துவ கண்காணிப்பில் இருப்பார்கள் என்றும் அனைவரும் நலமுடன் இதுப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் உணவில் பல்லி விழுந்ததாக கூறப்படும் பிலையில் நிலையில் விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டு உள்ளதாகவும் இப்படி சம்பவம் நடக்க கூடாது. பணியாளர் கவனக்குறைவா என்பதை விசாரணை முடிவில் தான் சொல்ல முடியும் என்றார்.

44 மாணவர்கள் உணவருந்தி உள்ள சூழலில் 5 மருத்துவர்கள் அவர்களுக்கு சிகிச்சை அளித்து வருவதாகவும் பள்ளியில் உள்ள உணவு கூடத்தில் ஆய்வு செய்யப்படும் என்றும் கூறியதுடன் இது தொடர்பாக அனைத்து பள்ளிகளுக்கும் ழுற்றறிக்கை அனுப்படும் எனவும் என்ன நடந்தது என விசாரணை முடிந்து தெரிவிக்கிறேன் எனவும் கூறினார்.

இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Link
பட்டத்தரசியம்மன் கோயில் பொங்கல் திருவிழா

பட்டத்தரசியம்மன் கோயில் பொங்கல் திருவிழா


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழக பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம் முக்கிய அறிவிப்பு..!!

3
4 hrs 38 mins agoshare
Neet exambutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved