Also Watch
Read this
By: Web Team

கோவை மாவட்டம் ஆழியார் கவியருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனைமலை, வால்பாறை பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில், வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஆழியார் கவியருவிக்கு நீர்வரத்து அதிகரித்து தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
இதையடுத்து அங்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. சோதனை சாவடியிலேயே சுற்றுலா பயணிகள் திருப்பி அனுப்பப்படுவதால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved