news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews ஒரு மாதமாக தவிக்கிறோம், விவசாயிகள் புகார் மனு
tv

Also Watch

ஒரு மாதமாக தவிக்கிறோம், விவசாயிகள் புகார் மனு

மயிலாடுதுறை

25

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், உரிய முறையில் நெல் கொள்முதல் செய்யப்படாததால், ஒரு மாதமாக தவித்து வருவதாக, மாவட்ட ஆட்சியர் மக்கள் குறைதீர் கூட்டத்தில், விவசாயிகள் புகார் மனு அளித்தனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில், குறுவை அறுவடை செய்யப்பட்டு வரும் நிலையில், 144 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகளின் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலும், கொள்முதல் செய்யப்பட்ட மூட்டைகளை கிடங்கிற்கு அனுப்பி வைக்கப்படாததால், விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்ய காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

விவசாயிகள் ஒரு மாதமாக கொள்முதல் நிலையங்களில் காத்திருப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர். இன்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு வந்த செருதியூர் பகுதி விவசாயிகள், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகளை வைத்துக்கொண்டு ஒரு மாதமாக காத்திருப்பதாகவும் குறைந்த அளவே நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படுவதால், தங்களின் மூட்டைகள் மழையில் நனைந்து ஈரப்பதம் அதிகரித்துள்ளதாகவும் கூறினர். உடனடியாக செருதியூர் கொள்முதல் நிலையத்தில் தேக்கமடைந்துள்ள நெல் மூட்டைகளை கிடங்கிற்கு அனுப்பி வைத்து, விவசாயிகளின் நெல்லை தங்கு தடை இன்றி, கொள்முதல் செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்திடம் மனு அளித்தனர். மாவட்ட ஆட்சியர், நேரடியாக வந்து பார்வையிட்டு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததாக விவசாயிகள் கூறினர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சிமெண்ட் தூண்களை ஏற்றிச் சென்ற வாகனம் விபத்து

1
3 mins agoshare
வாகனம் விபத்து








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved