Also Watch
Read this
By: Manigandan Raja

அடிப்படை வசதிகள் இல்லையென புகார் :
நூற்றுக்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் சாலையில் அமர்ந்த போராட்டத்தில் போக்குவரத்து பாதிப்பு விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள சுப்பிரமணியபுரம் பகுதியில் ரங்கநாயகி வரதராஜ் பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது.
கல்லூரியில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும்மாணவிகள் பயின்று வருகின்றனர் கல்லூரியில் மாணவ மாணவிகள் தங்குவதற்கு விடுதி வசதியும் உள்ளது.
இந்நிலையில் கல்லூரி மாணவர்கள் தங்கும் விடுதியில் உணவு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக இல்லை என்றும் மற்றும் கல்லூரிக்கு வந்து செல்லும்
பேருந்துகள் சரிவர பராமரிக்கப்படாததால் பேருந்துகள் மிகவும் சிதலமடைந்து உள்ளதாகவும்.

இதில் பயணிக்க மாணவர்களுக்கு சிரமத்திற்கு உள்ளாவதாகவும் மேலும் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் தேர்ச்சி அடையாத பாடங்களை மறு தேர்வு எழுதுவதற்கு அதிகப்படியான கட்டணங்கள் வசூலிக்கப்படுவதாகவும்.
கட்டணங்கள் கட்டினால் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவர்கள் சாத்தூரில் இருந்து தாயன்பட்டி செல்லும் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது தகவல் அறிந்த வெம்பக்கோட்டை போலீசார் கல்லூரி மாணவ மாணவிகளும்
பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved