Also Watch
Read this
By: Web Team

சென்னை ஆர்.கே. நகர் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் மெட்ரோ வாட்டர் குழாயில் பழுப்பு நிறத்தில் குடிநீர் வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
புதுவண்ணாரப்பேட்டை வெங்கடேசன் முதலி தெருவில் மெட்ரோ வாட்டர் குழாயில் ஒரு நாளைக்கு 2 மணி நேரம் மட்டும் அதுவும் பழுப்பு நிறத்தில் துர்நாற்றம் வீசும் குடிநீர் வருவதாக மக்கள் தெரிவித்தனர்.
கடந்த 2 மாதங்களாக மாசடைந்த குடிநீர் வருவதாகவும், மாநகராட்சி அதிகாரிகளிடம் புகாரளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அப்பகுதி பெண்கள் குற்றம் சாட்டினர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved