திண்டுக்கல்லில் இளைஞரை கடத்தி கொடூரமாக கொலை செய்தது தொடர்பாக 7 பேரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். சின்னாளப்பட்டி தென்றல் நகரை சேர்ந்த பாலமுருகன், தாம் பணிபுரியும் தனியார் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனக் கூறி பலரிடம் பணத்தை பெற்று திரும்பத் தராததால் கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.