news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home health ரீல்ஸ், ஷார்ட்ஸ் ஆதிக்கம்- மூளையை முடக்கும் 'டிஜிட்டல் போதை'
tv

Also Watch

ரீல்ஸ், ஷார்ட்ஸ் ஆதிக்கம்- மூளையை முடக்கும் 'டிஜிட்டல் போதை'

ஆபத்தை விளைவிக்கின்றன

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Reels

காலை கண் விழித்தது முதல் இரவு தூங்கச் செல்லும் வரை, நமது கட்டைவிரல்கள் ஸ்மார்ட்போன் திரையை மேல்நோக்கி தள்ளிக் கொண்டே இருக்கின்றன. 15 விநாடிகள் முதல் 60 விநாடிகள் வரை மட்டுமே ஓடக்கூடிய ரீல்ஸ் மற்றும் ஷார்ட்ஸ் வீடியோக்கள் இன்றைக்குப் பலருடைய நேரத்தை மட்டும் சாப்பிடுவதில்லை. நம் சிந்தனைத் திறனையும், கவனத்தையும் மெல்ல மெல்லச் சிதைத்துக் கொண்டிருக்கின்றன.

பொதுவாக நீண்ட நேரம் திரைப்படங்களையோ அல்லது யூடியூப் வீடியோக்களையோ பார்ப்பதை விட, இந்தச் குறுகிய வடிவ வீடியோக்கள் அதாவது Short-form Video Content-கள் ஏன் மனித மூளைக்கு அதிதீவிர ஆபத்தை விளைவிக்கின்றன?

இதனால் உடலுக்குள் நடக்கும் கெமிக்கல் ரியாக் ஷன்கள் என்னென்ன? மூளையின் இடது மற்றும் வலது பக்கங்களில் ஏற்படும் மாறுபட்ட பாதிப்புகள் என்ன என்பதை இந்த செய்தித் தொகுப்பில் விளக்கமாக இப்போது பார்க்கலாம்.

நாம் ஒவ்வொரு முறை புதுப்புது வீடியோவை ஸ்க்ரோல் செய்யும்போதும், நமது மூளையின் மீசோலிம்பிக் டோபமைன் பாதை தூண்டப்படுகிறது. குறிப்பாக, மூளையின் வென்ட்ரல் டெக்மென்டல் ஏரியா, நியூக்ளியஸ் அக்கம்பென்ஸ் என்ற மகிழ்ச்சிக்கான மையத்திற்கு டோபமைன் என்னும் நரம்புக்கடத்தி வேதிப்பொருளைச் சட்டென்று அதிகளவில் அனுப்புகிறது. இங்கேதான் ஒரு சுவாரஸ்யமான அறிவியல் உண்மை இருக்கிறது.

சூதாட்டக் கருவிகள் இயங்கும் அதே நரம்பியல் தத்துவம்

டோபமைன் என்பது வீடியோவைப் பார்த்து முடித்த பிறகு கிடைக்கும் மகிழ்ச்சிக்காக மட்டும் சுரப்பதில்லை. அடுத்த வீடியோவில் என்ன சுவாரஸ்யம் இருக்கப் போகிறதோ? என்ற எதிர்பார்ப்பில்தான் அதிகளவில் சுரக்கிறது.

இதையே மருத்துவ அறிவியலில் வேரியபிள் ரிவார்ட் சிஸ்டம் என அழைக்கிறார்கள். கேசினோக்களில் விளையாடப்படும் ஸ்லாட் மெஷின் சூதாட்டக் கருவிகள் இயங்கும் அதே நரம்பியல் தத்துவம்தான் இந்த ரீல்ஸ்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஒரு உதாரணத்திற்குச் சொன்னால், நாம் 10 ரீல்ஸ்களை ஸ்க்ரோல் செய்யும்போது, அதில் 3 ரீல்ஸ்கள் நமக்குச் சிரிப்பைத் தரலாம், 2 ரீல்ஸ்கள் மொக்கையாக இருக்கலாம், 1 ரீல்ஸ் மிக அதிர்ச்சியளிக்கலாம். அடுத்த வீடியோவில் என்ன வரப்போகிறது என்ற அந்த நிச்சயமற்ற தன்மையே மூளையைத் தொடர்ந்து ஸ்க்ரோல் செய்யத் தூண்டுகிறது.

மூளை ஒருவித மரத்துப்போன மனநிலைக்குச் செல்கிறது.

தொடர்ச்சியாக மணிக்கணக்கில் ரீல்ஸ் பார்க்கும்போது, மூளைக்குத் தேவையான அளவை விட பல மடங்கு அதிகமான டோபமைன் வெள்ளமெனப் பாய்கிறது. இதனால் மூளை தன்னைத் தற்காத்துக் கொள்ள, நரம்புகளில் உள்ள டோபமைன் D2 ரிசெப்டார்களை மழுங்கடிக்கிறது.

இதன் விளைவாக, நிஜ வாழ்க்கையில் நடக்கும் சாதாரண சுவாரஸ்யங்களான புத்தக வாசிப்பு, வேலை செய்தல் அல்லது மனிதர்களிடம் பேசுவது போன்ற விஷயங்களில் டோபமைன் சுரப்பு மிகக் குறைவாக உணர்ந்து, மூளை ஒருவித மரத்துப்போன மனநிலைக்குச் செல்கிறது.

சமீபத்தில் நரம்பியல் மற்றும் உளவியல் வல்லுநர்கள் மேற்கொண்ட ஆய்வுகளின்படி, குறுகிய வடிவ வீடியோக்கள் மூளையின் இரண்டு அரைக்கோளங்களிலும் கடுமையான மாறுபட்ட பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஒரு விஷயத்தை ஆழமாக யோசிக்கும் திறன் செயலிழக்கிறது.

மனித மூளையின் இடது பகுதி அதாவது Left Hemisphere என்பது தர்க்கரீதியான சிந்தனை அதாவது Logical Thinking, கணிதம், மொழியறிவு மற்றும் ஆழமான பகுப்பாய்வுக்குப் பயன்படக்கூடியது. நீண்ட நேரம் ரீல்ஸ் பார்க்கும்போது, தகவல்களைப் பகுப்பாய்வு செய்யும் வேலை மூளைக்குத் தேவைப்படாமல் போகிறது. இதனால் மூளையின் இடது பக்கத்தின் செயல்பாடுகள் மந்தமடைந்து, ஒரு விஷயத்தை ஆழமாக யோசிக்கும் திறன் செயலிழக்கிறது.

அதேவேளையில் மூளையின் வலது பகுதி , படைப்பாற்றல், உணர்ச்சிகளைக் கையாளுதல் மற்றும் கற்பனைத் திறனுக்கு பொறுப்பானது. ரீல்ஸ் பார்க்கும்போது, ஒரு விநாடி சோகமான வீடியோ, அடுத்த விநாடி காமெடி, அதற்கடுத்த விநாடி திகில் என சம்பந்தமே இல்லாத பல உணர்ச்சிகளைச் சில நொடிகளுக்குள் மூளை சந்திக்கிறது.

உணர்ச்சிகளைச் சமநிலையில் கையாள முடியாமல் திணறும் நிலை

இதனால் வலது மூளை எமோஷனல் ஓவர்லோட் அடைந்து, நிஜ வாழ்க்கையில் கோபம், சோகம் போன்ற உணர்ச்சிகளைச் சமநிலையில் கையாள முடியாமல் திணறும் நிலை ஏற்படுகிறது.

வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டேவிட் லெவி உருவாக்கிய பாப்கார்ன் பிரெய்ன் என்ற மருத்துவக் கோட்பாடும் இதையே தான் விளக்குகிறது. பாப்கார்ன் பொரிக்கும் போது மக்காச்சோளம் எப்படித் படபடவென வெடிக்கிறதோ, அதேபோல மூளையின் நரம்பு இணைப்புகளும் அதிவேகத் தகவல்களுக்கு மட்டுமே பழகிவிடுகின்றன.

இதனால் நிதானமான சூழ்நிலைகளை மூளையால் சகித்துக் கொள்ள முடியாமல் போகிறது. முடிவெடுக்கும் திறனையும், உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் திறனையும் கொண்ட மூளையின் முன்பகுதியான ப்ரீ ஃப்ரண்டல் கார்டெக்ஸ் பகுதி இதனால் மெலிவடைகிறது.

இதனால், குழந்தைகளிடம் கவனக்குறைவு மற்றும் செயல்பாட்டுக் கோளாறு , நினைவாற்றல் குறைபாடு மற்றும் சிறு சிறு விஷயங்களுக்கும் அதீத பதற்றமடைதல் போன்ற பிரச்சினைகள் தீவிரமடைகின்றன.

அதீத பதற்றமடைதல் போன்ற பிரச்சினைகள் தீவிரமடைகின்றன.

அதிக நேரம் ஸ்மார்ட்போன் திரையைப் பார்ப்பதால் நரம்பியல் மண்டலத்தில் மட்டுமல்லாமல், உடலின் ஒட்டுமொத்த ஹார்மோன் அமைப்பிலும் கடுமையான கெமிக்கல் ரியாக் ஷன்கள் நடக்குகின்றன.முதலாவதாக, மெலடோனின் ஹார்மோன் பாதிப்பு. இரவு நேரத்தில் திரையில் இருந்து வரும் நீல நிற ஒளி, மூளையின் Suprachiasmatic Nucleus பகுதியைப் பாதிக்கின்றது.

இதனால் தூக்கத்தைத் தூண்டும் மெலடோனின் ஹார்மோன் சுரப்பது முற்றிலுமாகத் தடைபட்டு, Circadian Rhythm எனப்படும் உடலின் பயோலாஜிக்கல் கடிகாரம் சீர்குலைகிறது.

இரண்டாவதாக, கார்டிசோல் மற்றும் அட்ரினலின் உயர்வு. குறுகிய வீடியோக்களில் வரும் திடீர் சத்தங்கள், அதிர்ச்சியூட்டும் காட்சிகள் உடலின் சிம்பதேடிக் நரம்பு மண்டலத்தை தூண்டி, ஃபைட் ஆர் ஃபிளைட் மனநிலையை ஏற்படுத்துகின்றன.

உடலின் பயோலாஜிக்கல் கடிகாரம் சீர்குலைகிறது.

இதனால் இரத்தத்தில் மன அழுத்தத்தை உண்டாக்கும் கார்டிசோல் ஹார்மோன் அதிகரித்து, காரணமில்லாத பதற்றமும், இரத்த அழுத்த உயர்வும் உண்டாகின்றன. மூன்றாவதாக, உடற்பயிற்சியின்மையால் செரடோனின் மற்றும் எண்டார்ஃபின் அளவுகள் சரிவடைந்து, மனச்சோர்வு மற்றும் செரிமானக் கோளாறுகள் ஏற்படுகின்றன.

தொழில்நுட்பம் நம் வாழ்க்கையை எளிதாக்குவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு கருவி. ஆனால், அந்தத் தொழில்நுட்பமே நம் மூளையின் வேதியியல் கட்டுப்பாட்டை தன் கையில் எடுக்கும்போது அது ஒரு கொடிய நரம்பியல் நோயாக மாறிவிடுகிறது.

தினமும் ரீல்ஸ் பார்க்கும் நேரத்தைக் குறைப்பது, டிஜிட்டல் டிடாக்ஸ் முறையைப் பின்பற்றுவது, இரவு தூங்குவதற்கு 1 மணி நேரத்திற்கு முன்பாகத் திரைகளைத் தவிர்ப்பது மற்றும் புத்தக வாசிப்பு, உடற்பயிற்சி போன்ற ஆழமான கவனம் தேவைப்படும் காரியங்களில் ஈடுபடுவதே நம் மூளையைப் பாதுகாப்பதற்கான ஒரே வழி என்பதே ஆய்வு முடிவுகள் சொல்லும் அறிவுரையாக இருக்கிறது.

Related Link
விமான நிலையத்தில் அனுபவித்த வேதனை

விமான நிலையத்தில் அனுபவித்த வேதனை

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இந்தியாவின் முதல் ஜியோ-இமேஜிங் செயற்கைக்கோள்

1
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved