news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home health தீக்காயம் பட்டால் என்ன செய்வது?
tv

Also Watch

tv

Read this

தீக்காயம் பட்டால் என்ன செய்வது?

தீக்காயம்

41

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Cooking fire

சமையல் செய்யும் போது பலருக்கும் உடலில் ஆங்காங்கே சூடான எண்ணெய் தெறிப்பது, சூடான பாத்திரங்களின் மேல் கை படுவது போன்றவை வாடிக்கையான ஒன்று.

அப்படி தீக்காயங்கள் ஏற்படும் போது எந்தமாதிரியான முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கும் ஆலோசனைகள் குறித்த தகவ்ல்களை இந்த பதிவில் பார்க்கலாம் வீடுகளில் இல்லத்தரசிகள் சமைக்கும்பொழுது பொதுவாக முகம், கை, விரல்கள் உள்ளிட்ட பகுதிகளில் தான் தீக்காயம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

அந்த வகையில் பாத்திரங்களை சமையலுக்கு பயன்படுத்தும் பொழுது அதிலிருந்து சூடுபட்டுக்கொள்வது அத்துடன் தண்ணீர் கொதிக்க வைக்கும் பாத்திரங்கள், துணி இஸ்திரி செய்யும் அயர்ன் பாக்ஸ், எதிர்பாராத மின்சார தாக்குதல், ஆடைகள் மற்றும் பிற பொருள்களில் தற்செயலாக தீப்பிடிப்பது ஆகியவற்றால் தீக்காயங்கள் ஏற்படலாம்.

அந்த சமயத்தில் தீப்புண்கள் மீது வெண்ணை, மாவு, சமையல் சோடா ஆகியவற்றை தடவுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டுமாம். மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் ஆயின்மென்ட், லோஷன் அல்லது எண்ணெய் ஆகியவற்றை பயன்படுத்தக் கூடாதாம்.

தீக்காயத்தால் ஏற்பட்ட கொப்புளத்தை தாமாக உடைக்கவோ, கிள்ளவோ அல்லது புண்களை வெறும் கைகளால் தொடுவதோ, துணி வைத்து துடைப்பதோ கூடாது என்கின்றனர் மருத்துவர்கள். மாறாக தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் தண்ணீரால் கழுவ வேண்டுமாம். சிறிய தீக்காயங்களாக இருந்தால் அதன் மீது நோய் தொற்று உருவாகி விடாமல் இருக்க பருத்தித் துணியால் மூடி, மருத்துவமனக்கு பாதிக்கப்பட்டவர்களை அழைத்துச் செல்ல வேண்டுமாம்.

பொதுவாக தீப்புண் ஏற்பட்டால் அதன் மீது பனிக்கட்டியை பயன்படுத்தாமல் குளிர்ந்த தண்ணீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். முதியோர்கள் மற்றும் குழந்தைகளுக்கு சிறிய தீக்காயங்கள் ஏற்பட்டாலும் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டுமே தவிற சுய மருத்துவம் செய்ய கூடாது என்கின்றனர் மருத்துவர்கள்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திமுக வேட்பாளரும் அமைச்சருமான மா.சுப்பிரமணியன் பிரச்சாரம்

0
3 mins agoshare
Minister Masu








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved