Also Watch
Read this
Posted on: Aug 16, 2024 03:53 PM
By: Admin News Tamil

வங்கதேசத்தில் நடக்கும் நிகழ்வுகள், சுதந்திரத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது என நமக்கு கற்று கொடுப்பதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கூறியுள்ளார். டெல்லி உச்ச நீதிமன்ற வளாகத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றிய அவர், வங்கதேசத்தின் அமைதியின்மை, சுதந்திரம் எவ்வளவு மதிப்புமிக்கது என்பதை தெளிவாக நினைவூட்டுவதாகவும், அது விலை மதிப்பற்றது என்பதை நினைவுப்படுத்த கடந்த காலங்களை கவனிப்பது முக்கியம் என்றார். மேலும் சுதந்திர தினம், குடிமக்கள் ஒவ்வொருவரும தேசத்திற்கு செய்ய வேண்டிய கடமைகளை நினைவூட்டுவதாகவும் கூறினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved