Also Watch
Read this
By: Web Team

கர்நாடகா மாநிலம் பெங்களூரு அருகே புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடத்தின் 4வது மாடியிலிருந்து ஹாலோ பிளாக் கற்கள் விழுந்ததில், பக்கத்து வீட்டிலிருந்த 4 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். எச்.ஏ.எல். சின்னப்பனஹள்ளியில் மனுஸ்ரீ என்ற பெண் வசித்து வந்த வீட்டிற்கு பக்கத்தில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் ஹாலோ பிளாக் கற்கள், மனுஸ்ரீ வீட்டின் சிமெண்ட் சீட்டை உடைத்துக்கொண்டு, அவரது மகளின் தலையில் விழுந்தது. இதில் படுகாயமடைந்த சிறுமி சம்பவ இடத்திலேயே பலியானார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved