Also Watch
Read this
By: Manigandan Raja

4,000 கி.மீ. தொலைவில் உள்ள இலக்குகளை தாக்கும்
இந்தியாவின் பாதுகாப்பு திறனை மேலும் வலுப்படுத்தும் வகையில், அணு ஆயுதங்களை ஏந்தி செல்லும் செல்லும் திறன் கொண்ட அக்னி- 4 பாலிஸ்டிக் ரக ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்தது.
ஒடிசாவின் சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை தளத்தில் நடைபெற்ற இந்த சோதனையில், அனைத்து செயல்பாடு மற்றும் தொழில்நுட்ப ரீதியில் நிர்ணயிக்கப்பட்ட முடிவுகளை எட்டியது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை 4 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளை தாக்கும் வல்லமை படைத்தது.
பெங்களூருவில் பல லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட வாய்ப்பு
கர்நாடகாவில் நடைபெற்று வரும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில், பெங்களூரு நகரில் அதிகளவிலான வாக்காளர்கள் நீக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

தலைமைத் தேர்தல் அதிகாரி வெளியிட்ட தகவலின்படி, பெங்களூருவில் வாழும் 40 லட்சத்து 21 ஆயிரம் வாக்காளர்களில் வெறும் 55 புள்ளி 39 சதவீத பேரின் விவரங்கள் மட்டுமே டிஜிட்டலில் பதிவாகியிருப்பதாகவும், மீதமுள்ள 17 லட்சத்து 93 ஆயிரம் பேரில் பெரும்பாலானவர்கள் இடமாற்றம் செய்துவிட்டதாகவும், பலர் உயிரிழந்துவிட்டதாகவும், சிலர் படிவத்தை பூர்த்தி செய்து தரவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜென் Z மற்றும் ஜென்-ஆல்ஃபா தலைமுறை பற்றி பேச்சு
தற்போதைய தலைமுறையை விட ஜென் Z மற்றும் ஜென்-ஆல்ஃபா தலைமுறையினர் அதிக நேர்மையானவர்கள் என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
மும்பையில் நடைபெற்ற இளைஞர் மாநாடு ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், பிரச்னைகள் குறித்து இளைஞர்கள் போராட்டம் நடத்துவது அவர்களின் ஜனநாயக உரிமை என்றும், அதற்காக அவர்களை தேச விரோதிகள் என்று முத்திரை குத்தக் கூடாது என்றும் வலியுறுத்தினார்.

ஜென்Z தலைமுறையினர் நம்மவர்கள் என்றும், அவர்களே நாட்டின் அடுத்த தலைமுறையை வழிநடத்தப் போகிறவர்கள் என்றும் அவர் கூறினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved