2 மாதங்கள் அமைதியாக இருந்த நேபாளத்தில் இளைஞர்கள் போராட்டம் தலைதூக்க ஆரம்பித்ததால் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. நேபாளத்தின் பாரா மாவட்டத்தின் சிம்பாரா பகுதியில் மாணவர்கள் மற்றும் ஷர்மா ஒலியின் ஆதரவாளர்கள் பேரணி நடத்தினர். அப்போது இரு தரப்புக்கு இடையே மோதல் ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் மீண்டும் மோதல் ஏற்படாமல் இருப்பதற்காக அந்நாட்டில் பல இடங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.