Also Watch
Read this
By: Web Team

ஏர் இந்தியாவின் அனைத்து போயிங் 787 டிரீம்லைனர் விமானங்களையும் முடக்க வேண்டும் என சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடுவுக்கு இந்திய விமானிகள் சங்கம் கடிதம் அனுப்பி உள்ளது.
போயிங் 787 டிரீம்லைனர் விமானங்களின் மின்சுற்று அமைப்புகளில் கோளாறுகள் உள்ளதா என்பதை முழுமையாக ஆராய்வதற்காக இந்த விமானங்களை உடனடியாக முடக்க வேண்டும் என அந்த கடிதத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதம் 12 ஆம் தேதி அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தில் 241 பேர் கொல்லப்பட்ட நிலையில், அதற்கு விமானி ஒருவரின் தவறும் காரணமாக இருக்கலாம் என செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில், அமைச்சர் ராம் மோகன் நாயுடுவுக்கு கடிதம் அனுப்பிய விமானிகள் சங்கம், ஏர் இந்தியா விமானங்களை சிறப்பு ஆய்வு செய்ய மூத்த அதிகாரிகள் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved