Also Watch
Read this
By: Manigandan Raja

சொத்து விவரங்களை மறைத்ததாக குற்றச்சாட்டு :
வேட்புமனுவில் சொத்து விவரங்களை மறைத்ததாக தன் மீது குற்றம்சாட்டியுள்ள காங்கிரஸ், அதனை நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும் என கேரள மாநில பாஜக தலைவர் ராஜீவ் சந்திரசேகர் சவால் விடுத்துள்ளார். கேரள சட்டமன்ற தேர்தலில் நேமம் தொகுதியில் போட்டியிடும் ராஜீவ் சந்திரசேகரின் வேட்பு மனுவில், அவரது சொத்து மதிப்பு சுமார் 93 கோடி என குறிப்பிடப்பட்டிருந்தது.
அதில் அவர் பெங்களூருவில் உள்ள 200 கோடி மதிப்பிலான சொகுசு பங்களாவை குறிப்பிடாமல் மறைத்ததாக காங்கிரஸ் குற்றம்சாட்டியது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ராஜீவ், பாஜக முன்வைத்துள்ள வளர்ச்சி திட்டங்கள் குறித்து குறை கூற ஒன்றுமில்லை என்பதால் காங்கிரஸ் அர்த்தமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாக தெரிவித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved