Also Watch
Read this
Posted on: Oct 25, 2025 01:13 PM
By: Web Team

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் ஆஸ்திரேலிய பெண் கிரிக்கெட் வீராங்கனைகளை பின் தொடர்ந்து சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.
ஐசிசி மகளிர் உலக கோப்பை போட்டிகளில் விளையாட வந்த ஆஸ்திரேலிய பெண் வீராங்கனைகள் தாங்கள் தங்கி இருந்த ஹோட்டலில் இருந்து வெளியே வந்து கஃபே ஒன்றுக்கு சென்ற போது பைக்கில் அவர்களை பின்தொடர்ந்து வந்த நபர் வீராங்கனைகளில் ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது.
கடந்த வியாழக்கிழமை காலை நடந்த இந்த சம்பவத்தில், குறிப்பிட்ட நபரின் பைக் எண்ணை வைத்து போலீசார் கைது செய்தனர். ஆஸ்திரேலிய வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டது குறித்து அணியின் பாதுகாப்பு அதிகாரி புகார் அளித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved