Also Watch
Read this
By: Web Team

பெங்களூரு கூட்ட நெரிசல் துயர சம்பவம் குறித்து காங்கிரஸ் மேலிடத்திடம் கர்நாடக முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் விளக்கமளித்தனர்.
ஐபிஎல் போட்டியில் கோப்பை வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் ஆஃப் பெங்களூரு அணி வெற்றி பேரணி நடத்திய போது, கட்டுக்கடங்காத கூட்டத்தால் நெரிசல் ஏற்பட்டு 11 பேர் உயிரிழந்தனர்.
மாநில காவல்துறையின் அலட்சியத்தாலும் மாநில அரசின் நிர்வாக திறமையின்மை காரணமாகவும் தான் துயர சம்பவம் அரங்கேறியதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.
நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இச்சம்பவம் குறித்து ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோரிடம் முதலமைச்சர் சித்தராமையாவும், துணை முதலமைச்சர் சிவக்குமாரும் விளக்கம் அளித்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved