பயங்கரவாதத்துடன் அமைதி இணைந்து வாழாது என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சீனாவில் நடைபெற்று வரும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் இந்தியா சார்பில் பங்கேற்று பேசிய அவர், அமைதி மற்றும் பாதுகாப்பு மட்டுமே மிகப்பெரிய சவாலாக இருப்பதாக கூறினார். மேலும், பேச்சுவார்த்தைகள் மற்றும் ஒத்துழைப்பு மூலம் நாடுகளுக்கு இடையேயான மோதலைத் தடுக்க முடியும் என நம்பிக்கை கூறிய ராஜ்நாத் சிங், எந்த நாடும், எவ்வளவு பெரியதாகவும் சக்திவாய்ந்ததாகவும் இருந்தாலும், தனியாக நிர்வகிக்க முடியாது என்றார்.இதையும் படியுங்கள் : நியூ யார்க் மேயர் தேர்தலில் முன்னிலை வகிக்கும் இந்திய வம்சாவளி..