Also Watch
Read this
By: Web Team

இண்டிகோ விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளதை பயன்படுத்தி நாடு முழுவதும் மற்ற விமான நிறுவனங்கள் கட்டணங்களை பன் மடங்கு உயர்த்தியுள்ள நிலையில், நிர்ணயிக்கப்பட்ட கட்டண வரம்புகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என விமான சேவை நிறுவனங்களுக்கு சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான அனைத்து விமான நிறுவனங்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ஏற்கனவே பயணங்கள் ரத்து, தாமதம் ஆகியவையால் அவதிப்பட்டு வரும் பயணிகளிடம் அதிக கட்டணத்தை வசூலிக்கக் கூடாது என கண்டித்துள்ளது. மேலும் டிக்கெட் முன்பதிவு தளங்களை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved