Also Watch
Read this
By: Web Team

குற்றவாளிகள் மற்றும் ஊழல்வாதிகள் சிறையில் இருக்க வேண்டுமே தவிர, ஆட்சி அதிகாரத்தில் இருக்கக் கூடாது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கொல்கத்தாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர், குற்றவழக்குகளில் கைதாகி 30 நாட்கள் சிறையில் இருந்தால் தானாக பதவிபறிக்கப்படும் சட்டமசோதாவுக்கு திரிணாமுல் காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்ததை கடுமையாக விமர்சித்தார்.
சிறைக்குள் இருந்து அரசை நடத்துபவர்கள் வெட்கமற்றவர்கள் என்றும், ஆசிரியர் தேர்வு முறைகேடு வழக்கில் சிறையிலடைக்கப்பட்ட ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அமைச்சர், இன்னும் தனது பதவியை விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை எனவும் பிரதமர் மோடி சாடினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved