Also Watch
Read this
By: Manigandan Raja

ரத யாத்திரையின்போது மின்சாரம் பாய்ந்து 2 மாணவர்கள் பலி
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ரத யாத்திரையின்போது தேரில் மின்சாரம் பாய்ந்ததில் 2 மாணவர்கள் உயிரிழந்தனர்.ஜெகநாதர் ரத யாத்திரையில் மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்று வடம் பிடித்து தேரை இழுத்துச் சென்றபோது, உயர் மின்னழுத்த கம்பி மீது உரசியது. இதில், தேரை வடம் பிடித்தபடி வந்த 7 மாணவர்கள் மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டதில் 2 பேர் உயிரிழந்தனர்.
பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் நகைக்கடையில் கொள்ளை

மகாராஷ்டிராவில் பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் நகைக்கடையில் 3 பேர் கொள்ளையடித்து விட்டு தப்பிச் சென்ற சிசிடிவி காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. முகமூடி அணிந்தும், புல்லட் புரூப் ஜாக்கெட் அணிந்தும் வந்த 3 பேர் கும்பல் கொள்ளையடித்து விட்டு வெளியே சென்றபோது, பொதுமக்கள் தங்களை நெருங்காமல் இருக்க வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டு பைக்கில் தப்பிச் சென்றுள்ளனர்.
இரவு நேரத்தில் வீட்டுக்குள் நுழைந்த காட்டு யானை

ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் (( Mayurbhanj )) பகுதியில் உணவு தேடி வீட்டுக்குள் நுழைந்த காட்டு யானை, அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்திய வீடியோ வெளியாகியுள்ளது. அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தீப்பந்தம் காட்டி யானையை வீட்டின் உரிமையாளர் விரட்டிய நிலையில், காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் துரத்த வேண்டும் என
மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved