news-tamil-logo

3/18/2026, 7:20:46 PM

news-tamil-logo
more
Advertisement
Home indianews முன்னாள் அமைச்சரின் பிரச்சார பிரிவு தலைவருக்கு தருமஅடி
tv

Also Watch

tv

Read this

முன்னாள் அமைச்சரின் பிரச்சார பிரிவு தலைவருக்கு தருமஅடி

திருப்பதி, ஆந்திரா

Posted on: Feb 01, 2026 09:57 AM

15

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Andhra

திருப்பதி அருகே உள்ள கிராமம் ஒன்றில் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி சேர்ந்தவர் பஞ்சாயத்து தலைவராக இருக்கிறார். ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது கட்சி வேலைகள் தொடர்பாக பஞ்சாயத்து தலைவர் தன்னுடைய மனைவியை அழைத்துக் கொண்டு திருப்பதியில் இருக்கும் ஆந்திர மாநில முன்னாள் அமைச்சர் பெத்தி ரெட்டி ராமச்சந்திரா ரெட்டி வீட்டிற்கு
அடிக்கடி சென்று வந்திருக்கிறார்.

அப்போது அமைச்சரின் பிரச்சார பிரிவு தலைவராக செயல்பட்ட ஹரிபிரசாத் ரெட்டி அமைச்சரிடம் கூறி அந்த பஞ்சாயத்து தலைவருக்கு பல வேலைகளை முடித்துக்
கொடுத்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஹரிபிரசாத் ரெட்டிக்கும் பஞ்சாயத்து தலைவர் மனைவிக்கும் இடையே நட்பு ஏற்பட்டு ரகசிய உறவாக மாறியது. இது பற்றி அறிந்த பஞ்சாயத்து தலைவர் தன்னுடைய மனைவியை கண்டித்து திருத்த முயற்சித்து இருக்கிறார்.

ஆனால் சொகுசு வாழ்க்கை, உல்லாசம் ஆகியவற்றுக்கு அடிமையான அந்த மனைவி கணவரின் பேச்சை கேட்கவில்லை. இந்த நிலையில் இன்றும் தன்னுடைய கள்ளக்காதலனுடன் பஞ்சாயத்து தலைவர் மனைவி காரில் எங்கோ உல்லாசத்திற்காக சென்று கொண்டிருந்தார்.

இது பற்றி தகவல் அறிந்த அந்த பஞ்சாயத்து தலைவர் வழியில் திட்டம் போட்டு காத்திருந்து மடக்கி பிடித்து அவர்கள் சென்ற காரை உடைத்து இரண்டு பேருக்கும்
தர்ம அடி கொடுத்தார். பின்னர் தன்னுடைய மனைவியை அவர் அங்கிருந்து இழுத்துச் சென்று விட்டார்.

இந்த சம்பவம் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி வட்டாரங்களில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related Link
சாமியார் வேடத்தில் வந்து கைவரிசை காட்டிய மூதாட்டி

சாமியார் வேடத்தில் வந்து கைவரிசை காட்டிய மூதாட்டி


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
2 hrs 33 mins agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved