Also Watch
Read this
By: Manigandan Raja

பாரம்பரிய இசை வாத்தியங்கள் முழங்க ஊர்வலம்
கர்நாடக மாநிலம் மங்களூருவில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளை பக்தர்கள் ஊர்வலமாக கொண்டு வந்தனர். பல்வேறு விதமான பூஜைக்குப் பின்னர் பாரம்பரிய இசை வாத்தியங்கள் முழங்க விநாயகப் பெருமான் ஊர்வலம் வந்தார்.
பல்வேறு வடிவில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள்
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தெலங்கானாவில் கடை வீதிகளில் சிறிய மற்றும் பெரிய வடிவிலான விநாயகர் சிலைகளை மக்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர். பல்வேறு அளவுகள் மற்றும் வடிவமைப்புகளில், கையால் செய்யப்பட்ட வண்ணமயமான சிலைகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.

கொட்டித் தீர்த்த கனமழையால் மக்கள் அவதி
தெலங்கானா மாநிலம் மஹாபுபாபாத்((Mahabubabad)) பகுதியில் கொட்டித் தீர்த்த கனமழையால் சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் தேங்கி மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகினர். பண்டிகை தினத்தை கூட கொண்டாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved