டி20 போட்டிகளில் 40-க்கும் குறைவான பந்துகளை எதிர்கொண்டு 2 சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற மாபெரும் உலக சாதனையை இந்திய உள்ளூர் வீரர் உர்வில் படேல் படைத்துள்ளார். சையத் முஷ்டாக் அலி தொடரில் குஜராத் வீரர் உர்வில் படேல் உத்தரகாண்ட் அணிக்கு எதிராக 36 பந்துகளில் சதத்தை கடந்து 115 ரன்கள் அடித்தார். அவர் நடப்பு சீசனில் திரிபுராவுக்கு எதிரான ஆட்டத்திலும் 28 பந்துகளில் சதம் அடித்திருந்தார்.