Also Watch
Read this
By: Manigandan Raja

சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கின் மனைவி திட்டவட்டம்
இரண்டு வாக்குறுதிகளை நிறைவேற்றினால் சோனம் வாங்சுக் இன்றே தனது உண்ணாவிரத போராட்டத்தை கைவிடுவார் என அவரது மனைவி தெரிவித்துள்ளார்.
மழைக்கால கூட்டத்தொடரில் கல்விசார் பொறுப்புடமை குறித்து விவாதம் நடத்துவதுடன், நாட்டின் கல்வி முறையில் சீர்த்திருத்தம் கொண்டு வரப்படும் என உறுதி அளித்தால் மட்டுமே அவரின் போராட்டம் முடிவுக்கு வரும் என திட்டவட்டமாக கூறியுள்ளார்.
தென் மாநிலங்களை பாதிக்கும் அம்சம் இருந்தால் எதிர்ப்போம்

தென் மாநிலங்களை பாதிக்கும் அம்சம் இருந்தால் தொகுதி மறுவரையறை மசோதாவை திமுக உறுதியாக எதிர்க்கும் என திருச்சி சிவா எம்.பி. திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்திற்கு பின் பேசிய அவர், மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை திமுக ஆதரிப்பதாக கூறினார்.
நாடாளுமன்ற கூட்டத்தொடரை ஒட்டி அனைத்துக்கட்சி கூட்டம்
திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சிகளின் அதிருப்தி எம்.பி.க்கள் விவகாரத்தை முன்வைத்து,டெல்லியில் நேற்று நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது குறித்து ஆலோசிக்க அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்திருந்தது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved