Also Watch
Read this
By: Web Team

இந்தியா ஒரு ஹிந்து நாடு என்ற சர்ச்சை கருத்தை முன்வைத்த ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், இதுவே உண்மை என்பதால் இந்தக் கூற்றை ஏற்றுக்கொள்ள அரசியலமைப்பின் அங்கீகாரம் தேவையில்லை என்றார். கொல்கத்தாவில் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நூற்றாண்டு விழாவில் உரையாற்றிய அவர், நாட்டில் அவசர நிலை பிரகடனப்படுத்தியிருந்த
காலத்தின் தான், அரசியலமைப்பு சட்டத்தில் மதச்சார்பின்மை என்ற சொல் சேர்க்கப்பட்டதாகவும், அதற்கு முன் அரசமைப்புச் சட்டத்தில் இடம்பெறவில்லை என்றும் கூறினார். அதோடு, ஆர்.எஸ்.எஸ்-ல் உள்ளவர்கள் தேசியவாதிகளே தவிர, இஸ்லாமியர்களுக்கு எதிரானவர்கள் அல்ல என்றும் விளக்கம் அளித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved